சினிமா செய்திகள்

உங்களுடைய சாதனைகள் எப்போதும் எங்களின் நினைவுகளில் இருக்கும்: நடிகர் விவேக் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர், ரகுமான் இரங்கல் + "||" + Composer AR Raghuman mourns actor Vivek's death

உங்களுடைய சாதனைகள் எப்போதும் எங்களின் நினைவுகளில் இருக்கும்: நடிகர் விவேக் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர், ரகுமான் இரங்கல்

உங்களுடைய சாதனைகள் எப்போதும் எங்களின் நினைவுகளில் இருக்கும்: நடிகர் விவேக் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர், ரகுமான் இரங்கல்
நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர், ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் டுவிட்டரில் கூறியதாவது:

நீங்கள் எங்கள் விட்டுப் பிரிந்ததை நம்பமுடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். பல வருடங்களாக எங்களைச் சிரிக்க வைத்தீர்கள். உங்களுடைய சாதனைகள் எப்போதும் எங்களின் நினைவுகளில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 11 அன்று ரகுமானைப் பாராட்டி விவேக் டுவீட் வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது:

தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும். இதை ரகுமான் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம். அதுவே இசைப்புயல் என்றார்.