சினிமா செய்திகள்

மறைந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு சென்ற நடிகர் விவேக்கின் கடைசி டுவீட் + "||" + Actor Vivek's last tweet

மறைந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு சென்ற நடிகர் விவேக்கின் கடைசி டுவீட்

மறைந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு சென்ற நடிகர் விவேக்கின் கடைசி டுவீட்
கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் விவேக் கடைசியாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. விவேக்கின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். 

அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டது ஏன்? - நடிகர் விவேக் விளக்கம் அளித்து பதிவிட்டு இருந்தார்.

அரசு சுகாதாரத்துறை செயலர் @RAKRI1ஓமந்தூரார் மருத்துவமனை டீன் மரு. ஜெயந்தி , மருத்துவர்கள் @AnandNodal@dromramesh ஆகியோருக்கு என் நன்றி.