சினிமா செய்திகள்

நடிகை சமீராரெட்டி கொரோனா தொற்று + "||" + Actress Sameerareddy Corona infection

நடிகை சமீராரெட்டி கொரோனா தொற்று

நடிகை சமீராரெட்டி கொரோனா தொற்று
‘எனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தன. இதனால் பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நடிகர் அதர்வா, நடிகை சமீரா ரெட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அதர்வா பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி முப்பொழுதும் கற்பனைகள். பரதேசி, இரும்புக்குதிரை, கணிதன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதர்வாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அதர்வா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தன. இதனால் பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கொரோனா விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணம் அடைந்து மீண்டும் பணிகளை தொடங்குவேன்'' என்று கூறியுள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜித்குமாரின் அசல், விஷாலுடன் வெடி, ஆர்யாவுடன் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீரா ரெட்டி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். நேர்மறையோடு வலுவாக இருக்க வேண்டிய தருணம் இது.’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு
ஜிம்பாப்வே நாட்டில் இருந்து திரும்பியவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
5. டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி
லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.