சினிமா செய்திகள்

அழகுகலை சிகிச்சையால் முகம் வீங்கியது நடிகை ரைசா வில்சன் புகார் + "||" + By cosmetic treatment The face was swollen Actress Raisa Wilson complains

அழகுகலை சிகிச்சையால் முகம் வீங்கியது நடிகை ரைசா வில்சன் புகார்

அழகுகலை சிகிச்சையால் முகம் வீங்கியது நடிகை ரைசா வில்சன் புகார்
அழகு கலை சிகிச்சையால் முகம் வீங்கிய தோற்றத்தில் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன்.
பியார் பிரேம காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வேலை இல்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது த சேஸ், காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரைசா வில்சனின் முகம் வீங்கி இருக்கிறது.

புகைப்படத்தின் கீழ் ரைசா வில்சன் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் முகத்துக்கு எளிமையான முறையில் 'பேசியல்' செய்ய பெண் அழகுகலை நிபுணரிடம் சென்றேன். அந்த பெண் எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி சில அழகு செயல் முறைகளை செய்தார். அதன் விளைவாக எனது முகம் வீங்கி விட்டது. நான் தொடர்பு கொண்டபோது என்னை சந்திக்கவோ என்னுடன் பேசவோ அந்த பெண் மறுத்து விட்டார். ஊழியர்களிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்தனர்’’ என்று கூறியுள்ளார்.