சினிமா செய்திகள்

கொரோனா பயத்தில் படப்பிடிப்புக்கு வரமறுத்த ஜெகபதி பாபு + "||" + Jagapathi Babu refuses to shoot for fear of corona

கொரோனா பயத்தில் படப்பிடிப்புக்கு வரமறுத்த ஜெகபதி பாபு

கொரோனா பயத்தில் படப்பிடிப்புக்கு வரமறுத்த ஜெகபதி பாபு
பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு தமிழில் தாண்டவம், புத்தகம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் மகா சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மகா சமுத்திரம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு முக்கிய காட்சிகளை விசாகபட்டினத்தில் படமாக்கி வருகிறார்கள். இதற்காக துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விசாகபட்டினத்தில் குவிந்துள்ளனர். ஜெகபதிபாபு நடிக்கும் காட்சிகளை படமாக்க அழைத்தபோது அவர் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து விட்டார்.

கொரோனா 2-வது அலை காற்று மூலம் பரவுவதால் நெடுந்தொலைவுக்கு பயணம் செய்து என்னால் வர முடியாது என்று சொல்லி அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சியாகி உள்ளார். ஜெகபதிபாபு வசிக்கும் இடத்தின் பக்கத்திலேயே அரங்குகள் அமைத்து அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கலாமா? என்று ஆலோசிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.95 கோடியாக உயர்ந்துள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது.
3. சீனாவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது.
5. சீனாவில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.