சினிமா செய்திகள்

விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.? + "||" + Junior NTR starting with Vijay?

விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.?

விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.?
ஒரே படத்தில் இரண்டு முன்று கதாநாயகர்கள் இணைந்து நடிப்பதை இந்தி பட உலகில் சகஜமாக காண முடியும். தமிழ் திரையுலகில் ஏற்கனவே இந்த முறை இருந்துள்ளது.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். தற்போது மீண்டும் அந்த வழக்கம் தென்னிந்திய திரையுலகில் பரவி வருகிறது. இதற்கு விஜய் சேதுபதி வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். விக்ரம் வேதா படத்தில் மாதவனுடனும், ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களிலும் நடித்துள்ளார். இரும்புத்திரை படத்தில் விஷால், அர்ஜுன் நடித்தனர்.

மோகன்லால் நடித்து தமிழ், மலையாளத்தில் திரைக்கு வர உள்ள அரபிக்கடலண்டே சிம்ஹம் படத்தில் அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி நடித்துள்ளனர். இந்த நிலையில் விஜய்யையும் பிரபல தெலுங்கு கதாநாயகன் ஜூனியர் என்.டி.ஆரையும் புதிய படமொன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை இயக்க அட்லி பெயர் அடிபடுகிறது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. விஜய் தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர் அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி
விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொடங்கியது. விஜய்யுடன் இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
2. 66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம்.
3. விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்யை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
4. நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு!
கொரோனா தொற்றுப் பரிசோதனையில் தனக்குத் தொற்று உறுதியாகியிருப்பதாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். டுவீட் செய்துள்ளார்.
5. விஜய்யின் 66-வது படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது.