சினிமா செய்திகள்

இளம் நடிகைக்கு கொரோனா + "||" + For the young actress Corona

இளம் நடிகைக்கு கொரோனா

இளம் நடிகைக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். படப்பிடிப்பில் பங்கேற்பவர்களையும் கொரோனா தாக்குகிறது.
நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், டோவினோ தாமஸ், நடிகைகள் அலியாபட், கத்ரினா கைப், நிவேதா தாமஸ், டைரக்டர் விஜயேந்திர பிரசாத் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் சிலர் சிகிச்சைக்கு பின் குணமாகி மீண்டுள்ளனர்.

இந்த நிலையில் இளம் நடிகையான பிரபல பஞ்சாப் மொழி நடிகை சாரா குர்பால் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சாரா குர்பாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 1,674 பேருக்கு கொரோனா; 1,376 பேர் டிஸ்சார்ஜ்
கர்நாடகாவில் தற்போது 24,280 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. கர்நாடகாவில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கர்நாடகாவில் தற்போது 24,144 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் தற்போது 20,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் இன்று 90 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 803 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.