சினிமா செய்திகள்

இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு மகனுடன் நடிக்கும் விக்ரம் + "||" + Final stage shooting Vikram playing with son

இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு மகனுடன் நடிக்கும் விக்ரம்

இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு மகனுடன் நடிக்கும் விக்ரம்
தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசனுடன் பிரபு, சிவகுமாருடன் சூர்யா, சத்யராஜுடன் சிபிராஜ், விஜயகுமாருடன் அருண் விஜய் என்று தந்தை மகன் இணைந்து நடித்த படங்கள் வந்துள்ளன.
அந்த வரிசையில் விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். துருவ் விக்ரம் ஏற்கனவே தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் கதாநாயனாக அறிமுகமானார். விக்ரமும் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

இது விக்ரமுக்கு 60-வது படம். இதில் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். வாணி போஜன் இன்னொரு நாயகியாக வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். துருவுக்கு விக்ரம் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை துருவ் விக்ரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.