முரளியின் 2-வது மகனும் கதாநாயகன் ஆனார்


முரளியின் 2-வது மகனும் கதாநாயகன் ஆனார்
x
தினத்தந்தி 23 April 2021 2:19 PM GMT (Updated: 2021-04-23T19:49:17+05:30)

முரளியின் 2-வது மகனும் கதாநாயகன் ஆனார்.

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே திரையுலகுக்கு அறிமுகமாகி கதா நாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவருடைய தம்பி ஆகாஷ் முரளியும் கதாநாயகன் ஆகியிருக்கிறார். அவர் கதாநாய கனாக அறிமுகமாகும் படத்தை டைரக்டு செய்பவர், விஷ்ணுவர்தன். இவர், ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ‘சர்வம்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.

விஷ்ணுவர்தன் தற்போது கரண் ஜோகர் தயாரிப்பில், இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ரா பற்றிய ‘சீர்சாஹ்’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். அதில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகிய இருவரும் நடித்து வருகிறார்கள்.

ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை தயாரிப்பவர், சேவியர் பிரிட்டோ. இவர், விஜய் நடித்து வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்தவர்.

Next Story