‘‘பெயர் மாற்றம் செய்யவில்லை’’ - நடிகை திரிஷா


‘‘பெயர் மாற்றம் செய்யவில்லை’’ - நடிகை திரிஷா
x
தினத்தந்தி 25 April 2021 6:14 AM GMT (Updated: 2021-04-25T11:44:35+05:30)

நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ‘‘நான் பெயர் மாற்றம் செய்யவில்லை’’ என்று திரிஷா கூறுகிறார்.

‘லேசா லேசா’ படத்தின் மூலம் திரிஷா திரையுலகுக்கு அறிமுகமானார். அவர் இதுவரை 68 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 68-வது படமான ‘பரமபதம் விளையாட்டு’ சமீபத்தில் திரைக்கு வந்தது.

அந்த படத்தின் ‘டைட்டிலில்’ திரிஷா என்பதற்கு பதில், ‘த்ர்ஷா’ என்று போட்டு இருந்தார்கள். இதை வைத்து திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக பேசப்பட்டது.

இதுபற்றி திரிஷாவிடம் கேட்கப்பட்டது. ‘‘நீங்கள் பெயர் மாற்றம் செய்து கொண்டதாக பேசப்படுகிறதே...உண்மையா?’’ என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

‘‘நான் பெயர் மாற்றம் செய்யவில்லை. அதற்கு அவசியமில்லை. ‘திரிஷா’ என்ற அழகான பெயர் இருக்கும்போது, அந்த பெயரை ஏன் மாற்ற வேண்டும்? வதந்திகளை என் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்’’ என்று அவர் கூறினார்.

Next Story