சினிமா செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி + "||" + Karthi in a double role again in a different look

வித்தியாசமான தோற்றத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி

வித்தியாசமான தோற்றத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி
கார்த்தி நடித்து 2019-ல் தேவ், கைதி, தம்பி ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்தன. கைதி வசூல் சாதனை நிகழ்த்தியது.
கொரோனாவால் கடந்த வருடம் படங்கள் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் கார்த்தியின் சுல்தான் படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது. கொரோனாவால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். 

இந்த நிலையில் கார்த்தி அடுத்து புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். லட்சுமன்குமார் தயாரிக்க பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு வேடத்தில் வயதானவராக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். ஏற்கனவே சிறுத்தை படத்தில் இரு வேடங்களில் நடித்து இருந்தார். விஷால் நடித்த இரும்புத்திரை சிவகார்த்திகேயனின் ஹீரோ படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷி கன்னா நடிக்கிறார். சிம்ரன், சங்கி பாண்டே, ரஜிஷா விஜயன், முரளிசர்மா, முனிஷ் காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை உறுதி செய்த கார்த்தி
இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம், ‘பொன்னியின் செல்வன்.’ மணிரத்னம் டைரக்டு செய்கிறார். பிரபு, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்பட திரையுலகின் பல பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள்.
2. ஒரே ஸ்டூடியோவில் விஜய், கார்த்தி
விஜய், கார்த்தி ஆகியோரின் 2 படங்களின் படப்பிடிப்புகளும் பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டூடியோவில் நடக்கிறது.
3. புதிய படத்தில் இரட்டை வேடங்களில் கார்த்தி
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.