சினிமா செய்திகள்

சினிமாவை மீண்டும் வீழ்த்திய கொரோனா; நடிகை அஞ்சலி வருத்தம் + "||" + Corona, who brought cinema back; Actress Anjali is upset

சினிமாவை மீண்டும் வீழ்த்திய கொரோனா; நடிகை அஞ்சலி வருத்தம்

சினிமாவை மீண்டும் வீழ்த்திய கொரோனா; நடிகை அஞ்சலி வருத்தம்
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அஞ்சலி, கொரோனா முன் எச்சரிக்கைகள் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
‘‘மக்கள் அனைவரும் கொரோனா முன் எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முக கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள். கொரோனா தொடர்ந்து நம்மை வேதனைப்படுத்தி வருகிறது. பலர் நெருங்கியவர்களை இழந்து நிற்கிறார்கள். இதை மனதில் வைத்து எச்சரிக்கையாக இருங்கள். கொரோனா விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். நானும் கொரோனா காலத்தில் படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன். ஆனால் அனைத்து முன் எச்சரிக்கையையும் எடுத்துக்கொள்கிறேன். என் அருகில் இருக்கும் உதவியாளர்களும் ஜாக்கிரதையாக உள்ளனர். படப்பிடிப்பு அரங்கில் எல்லோரும் முக கவசம் அணிகிறார்கள். சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறார்கள். எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவை சாப்பிடுங்கள். சாப்பிடுவது, தூங்குவது என்று இல்லாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். கொரோனாவால் எல்லா துறையும் நஷ்டம் ஆகி விட்டது. சினிமா உயிர்த்தெழுந்த நேரத்தில் இரண்டாவது அலை வந்து வீழ்த்தி இருக்கிறது. நோய் தொற்றோடு சேர்ந்து நாம் பயணம் செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.''

இவ்வாறு அஞ்சலி வருத்தத்தோடு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய ஆக்கி அணியின் கேப்டன் உள்பட 7 வீராங்கனைகள் கொரோனாவால் பாதிப்பு
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள சாய் மையத்தில் தொடங்க இருந்தது.
2. மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே நாளில் 71,736 பேர் குணமடைந்தனர்
மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 736 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகினர். புதிய பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்தது.
3. மும்பையில் சரிந்து வரும் தொற்று பாதிப்பு; கொரோனா 2-வது அலையின் உச்சம் முடிவுக்கு வருகிறதா? நிபுணர்கள் கருத்து
மும்பையில் தொடர்ந்து சரிந்து வரும் கொரோனா பாதிப்பால் 2-வது அலையின் உச்சம் முடிவுக்கு வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
4. கொரோனா சூழல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோடை விடுமுறை
அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தனது முதல் பணி நாளில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
5. கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றி ஜப்பான் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடி நேற்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.