சினிமா செய்திகள்

நடிகை நந்திதாவுக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection for actress Nandita

நடிகை நந்திதாவுக்கு கொரோனா தொற்று

நடிகை நந்திதாவுக்கு கொரோனா தொற்று
தமிழில் அட்டகத்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்திதா.
எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, இடம்பொருள் ஏவல். புலி, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.கொரோனா 2-வது அலையில் நந்திதாவுக்கு தற்போது தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார். இரு தினங்களுக்கு முன்பு விஜய்யின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: கமிஷனர் கிரிஷா
திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என கமிஷனர் கிரிஷா தெரிவித்துள்ளார்.
2. புதுவையில் மேலும் 113-பேருக்கு கொரோனா
புதுவையில் மேலும் 113-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.73 சதவிகிதமாக உள்ளது.
4. கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.