சினிமா செய்திகள்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் தாமிரா உயிரிழந்தார் + "||" + Director Tamira passed away who was receiving treatment for corona

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் தாமிரா உயிரிழந்தார்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் தாமிரா உயிரிழந்தார்
‘ஆண் தேவதை’ திரைப்பட இயக்குனர் தாமிரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது. இதற்கிடையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழில் ‘ரெட்டைச் சுழி’, ‘ஆண் தேவதை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தாமிரா, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து 53 வயதான இயக்குனர் தாமிரா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில் 19,849 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2. ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே கொரோனா சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
3. நாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு கூடுதலானோருக்கு கொரோனா சிகிச்சை
நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்து சென்றுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
4. நாடு முழுவதும் 9 லட்சம் பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கொள்ளை - காவல்துறை ஆய்வு
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.