சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று + "||" + Allu Arjun Tests Positive for Coronavirus, Says 'Don't Worry About Me, I'm Doing Fine'

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஐதராபாத்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒன்றரை கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
2. தாராவியில் புதிதாக 18 பேருக்கு தொற்று பாதிப்பு
மும்பை தாராவியில் புதிதாக 18- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியது
டெல்லியில் இன்று மேலும் 24,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தார் உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தார்.