சினிமா செய்திகள்

சமந்தாவின் நடிப்பு அனுபவம் + "||" + Samantha's acting experience

சமந்தாவின் நடிப்பு அனுபவம்

சமந்தாவின் நடிப்பு அனுபவம்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் சாகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் சாகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“திரையில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நாங்கள் நடிக்கிறோம். அதை பார்த்து உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களும் எங்களுக்கு தெரியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சினிமா வேறு. வாழ்க்கை என்பது வேறு. சாதாரண மனுஷியாக எனக்கு கூட சில எல்லைகள் இருக்கிறது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்து விட்டேன். இப்போது தெலுங்கில் சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறேன். நானும் மனுஷிதான். எல்லோரையும் மாதிரி நானும் தவறுகள் செய்வேன். நடிகையாக அடுத்தவர்கள் கோணத்தில் என்னை நான் பார்த்துக்கொண்டு இருப்பேன். நடிகை என்பதால் மற்றவர்கள் வாழ்க்கையில் கூட நாங்களே வாழ்ந்து காட்டி விடுகிறோம்.

ஒரு கதாநாயகியின் கதாபாத்திரத்தை வைத்து நம்மிடம் என்ன குறை இருக்கிறது. நாம் எதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.''

இவ்வாறு சமந்தா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சமந்தாவின் முதல் காதல்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சென்னை பல்லாவரத்தில் வளர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் குடியேறிவிட்டார்.