சினிமா செய்திகள்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா + "||" + Corona to famous Telugu actor Allu Arjun

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைககள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி வருகிறார்கள்.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைககள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி வருகிறார்கள். நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், செந்தில், டோவினோ தாமஸ், நடிகைகள் பூஜா ஹெக்டே, நந்திதா, அலியாபட், கத்ரினா கைப், நிவேதா தாமஸ், டைரக்டர் விஜயேந்திர பிரசாத் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இவர்களில் சிலர் சிகிச்சைக்கு பின் குணமாகி மீண்டுள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் அல்லு அர்ஜூனுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கொரோனா வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். என்னை பற்றி ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம். நலமாகவே இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்தார்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பினார்.
2. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவச கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியது. ஒரே நேரத்தில் பலர் ஆர்வம் காட்டியதால் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 751 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
4. வண்டலூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி விரிவு பகுதி சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
5. தினந்தோறும் உயர்ந்துகொண்டிருக்கும் பரவல்: தமிழகத்தில் 16,665 பேருக்கு கொரோனா ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.