சினிமா செய்திகள்

தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ் + "||" + Dhanush movie will be released in ODT in June

தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ்

தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ்
கொரோனா 2-வது அலை தீவிரமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி மற்றும் பீட்சா 2-ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
கொரோனா 2-வது அலை தீவிரமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி மற்றும் பீட்சா 2-ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தையும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்த நிலையில் ஜூன் மாதம் ஜெகமே தந்திரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.

ஏற்கனவே ஜெகமே தந்திரம் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்று தனுஷ் வற்புறுத்தி இருந்தார். அவரது ரசிகர்களும் ஓ.டி.டி.யில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி ஓ.டி.டி.யில் வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். லால் ஜோஸ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே சூரரை போற்று, க.பெ.ரணசிங்கம், பொன்மகள் வந்தாள், மூக்குத்தி அம்மன், பெண்குயின் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம் படம் குறித்த வீடியோவை பகிர்ந்த கமல்.. கொண்டாடும் ரசிகர்கள்
கமல் நடித்து வெளியாகவுள்ள 'விக்ரம்' திரைப்படம் குறித்து நடிகர் கமல் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2. தனுஷ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் மரணம்
தனுஷ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் மரணம் அடைந்தார்.
3. இறுதிக்கட்டத்தில் வெந்து தணிந்தது காடு - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துவருகிறார்.
4. தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
5. நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ஜெய் படம்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான வீரபாண்டியபுரம் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது ஜெய்யின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.