சினிமா செய்திகள்

டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்! + "||" + Director K.V. Anand death!celebrities mourn

டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்!

டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு  திரை உலக பிரபலங்கள் இரங்கல்!
டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

தற்போது கே.வி.ஆனந்த்தின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னனி டைரகடர்களின்  திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்  கே.வி.ஆனந்த், கடந்த 1995 ஆம் ஆண்டு, ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். இவரது இயக்கத்தில் வெளியான அயன், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், "பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி." எனத் தெரிவித்துள்ளார்.


டைரக்டர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், தமிழனுக்கு பெருமைச் சேர்த்த பேரன்பு கொண்ட கே.வி. ஆனந்த். உன் மறைவு நம்பமுடியவில்லை, அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், திரையுலகத்துக்கும், ஆழ்ந்த இரங்கல்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மறைந்த டைரக்டர் கே.வி. ஆனந்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி வெளியிட்ட இரங்கல் செய்தியில், கே.வி. ஆனந்த் மறைவை குறிப்பிட்டு, இந்தாண்டு தமிழ் திரைத்துறைக்கு மிகவும் மோசமான ஆண்டு என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் கே.வி. ஆனந்தின் இந்த திடீர் மறைவு நம்பமுடியவில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
கே.வி. ஆனந்த் மறைவுக்கு, அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்த அல்லு அர்ஜுன், கே.வி. ஆனந்த ஒரு மிக சிறந்த ஒளிப்பதிவாளர், திறைமையான இயக்குநர் மற்றும் சிறந்த மனிதர் என்றும் தெரிவித்துள்ளார்.
விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே. வி. ஆனந்த் என தனது கவிதை வரிகளால் பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அயன், மாற்றான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கே. வி. ஆனந்துடன் இணைந்து பணியாற்றியவர்.
அவர் தனது டுவிட்டரில், நண்பர் கே. வி. ஆனந்தின் மரண செய்தி அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் எனத் தெரிவித்தார்.
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்தின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்திருந்தார்.
நம் கண்களில் இருந்து கே.வி. ஆனந்த மறைந்திருந்தாலும் நம் உள்ளத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார் என அவர் தெரிவித்தார்.
நண்பர் கே.வி. ஆனந்த ஆன்மா சாந்தியடையட்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேத்திக்கு தலைவாரிவிடும் நடிகர் மம்முட்டி...
பேத்திக்கு தலைவாரிவிடும் நடிகர் மம்முட்டி...பலரும் பிக்சர் ஆஃப் தி டே என்று பதிவிட்டு வருகின்றனர்.
2. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகை இம்ரான் கானின் உதவி கேட்டு கடிதம்
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகை பிரதமர் இம்ரான் கானின் உதவி கேட்டு கடிதம் எழுதி உள்ளார். நில அபகரிப்பாளர் தனது தாயைக் கடத்திச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
3. சினிமா படபிடிப்புக்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா
'பாட்டு' சினிமா படபிடிப்புக்காக தனி விமானத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.
4. உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் 19 ஆம் தேதி அமெரிக்கா பயணம்
உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
5. தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்!
தேசிய விருது வென்ற கன்னட நடிகர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.