குடும்பம் கைவிட்டதால் கஷ்டப்படும் நடிகர்


குடும்பம் கைவிட்டதால் கஷ்டப்படும் நடிகர்
x
தினத்தந்தி 30 April 2021 5:38 AM GMT (Updated: 2021-04-30T11:08:05+05:30)

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீகிருஷ்ணா தொடரில் பீஷ்மராக நடித்து பிரபலமானவர் சுனில் நாகர்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீகிருஷ்ணா தொடரில் பீஷ்மராக நடித்து பிரபலமானவர் சுனில் நாகர். மகாபலி ஹனுமான் தொடரில் பிரம்மனாக நடித்து இருந்தார். தால் உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் குடும்பத்தினர் தன்னை கைவிட்டதால் கஷ்டப்படுவதாக சுனில் நாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது மகனை கான்வென்டில் சேர்த்து படிக்க வைத்தேன். அவனது படிப்புக்காக எனது சேமிப்பு பணம் முழுவதையும் செலவு செய்தேன். ஆனால் மகன் இப்போது என்னை கைவிட்டுவிட்டான். உறவினர்களும் என்னை கண்டுகொள்ளவில்லை.

இதனால் அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். சொந்த வீட்டை விற்றுவிட்டேன். இப்போது வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன். உடல்நல பிரச்சினைகளும் உள்ளன. ஒரு ஓட்டலில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஊரடங்கு அறிவித்ததால் ஓட்டலை மூடிவிட்டனர். இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இந்தி நடிகர்கள் சங்கத்தில் உதவி கேட்டு இருக்கிறேன்’’ என்றார்.

Next Story