சினிமா செய்திகள்

சர்ச்சை பதிவுகளுக்கு யுவன் சங்கர் ராஜா பதிலடி + "||" + Yuvan Shankar Raja retaliates for controversial posts

சர்ச்சை பதிவுகளுக்கு யுவன் சங்கர் ராஜா பதிலடி

சர்ச்சை பதிவுகளுக்கு யுவன் சங்கர் ராஜா பதிலடி
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது வலிமை, மாநாடு, நானே வருவேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது வலிமை, மாநாடு, நானே வருவேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்ட கருத்துக்கள் விமர்சனங்களை கிளம்பியது. இது ரசிகர்களுக்கான பக்கமா அல்லது உபதேசம் செய்யும் பக்கமா? இசைக்காகவே உங்களை பின் தொடர்கிறோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு உங்கள் பங்களிப்பு என்ன? இசை மூலம் மக்களிடம் இருந்துதான் நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள்? என்றெல்லாம் அவருக்கு ரசிகர்கள் சர்ச்சை கேள்விகளை எழுப்பினார்கள்.

அதற்கு யுவன் சங்கர் ராஜா, “என்னை பிடிக்காதவர்கள் சமூக வலைத்தளத்தில் பின் தொடராமல் வெளியேறி விடலாம். திரையுலக பிரபலங்களுக்கும், தனி மனிதர்களுக்கும் சொந்த உரிமைகள் உள்ளன. எனது நம்பிக்கை என்பது எனது உரிமை. வெறுப்பு பிரசாரம் செய்ய வேண்டாம். நானாவது எனது இசை மூலமாக மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்து இருக்கிறேன். நீங்கள் உலக நலனுக்காக என்ன செய்து இருக்கிறீர்கள். எனக்கு எது பிடிக்குமோ அதை செய்கிறேன்'’ என்பது உள்பட பல கருத்துக்களை வலைத்தளத்தில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.