சினிமா செய்திகள்

அஜித் குமாரின் 61-வது படம் + "||" + Ajith Kumar's 61st film

அஜித் குமாரின் 61-வது படம்

அஜித் குமாரின் 61-வது படம்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 60-வது படமான வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 60-வது படமான வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய சில முக்கிய காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. கொரோனா 2-வது அலை பரவலால் அந்த காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

அஜித்தின் வலிமை முதல் தோற்ற போஸ்டர் அவரது 50-வது பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் கொரோனா தீவிரத்தினால் அதை தள்ளி வைத்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் அஜித்குமார் நடிக்கும் 61-வது படத்தையும் வினோத் இயக்குவதாகவும் போனிகபூர் தயாரிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 61-வது படத்துக்கான திரைக்கதையை வினோத் தயார் செய்து அஜித்குமாரிடம் சொன்னதாகவும், அவருக்கு கதை பிடித்து விட்டதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

வலிமை படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு தள்ளிப்போவதால் 61-வது படத்துக்கான படப்பிடிப்பை உடனடியாக தொடங்கலாமா என்று ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவலை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ்
கொரோனா 2-வது அலை தீவிரமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி மற்றும் பீட்சா 2-ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
2. அஜித்தின் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு
அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
3. வரலாற்று பின்னணியில் சன்னி லியோன் நடிக்கும் நகைச்சுவை திகில் படம்
நகைச்சுவை-திகில் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். நகைச்சுவை, திகில் இரண்டும் சரிசம விகிதத்தில் கலந் திருக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
4. வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை
சட்டமன்ற தேர்தலில் நேற்று பொதுமக்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
5. விஷால் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
கொரோனா திரைத்துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பல படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வருகின்றன.