சினிமா செய்திகள்

மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி + "||" + Director KV Anand, who died of a heart attack, has been diagnosed with a corona infection

மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி

மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை

சென்னை

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

தற்போது கே.வி.ஆனந்த்தின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னனி டைரகடர்களின்  திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்  கே.வி.ஆனந்த், கடந்த 1995 ஆம் ஆண்டு, ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். இவரது இயக்கத்தில் வெளியான அயன், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி ஆகி உள்ளது.கொரோனா தொற்று இருந்ததால், வீட்டில் 5 நிமிடங்களுக்கு மட்டும் கே.வி.ஆனந்தின் உடல் வைக்கப்படுகிறது. கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை மியாட் மருத்துவமனையில் இருந்து உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமாவில் இருந்து விலகப் போவதாக பிரபல நடிகர் அறிவிப்பு...!
திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை டுவிட்டர் மூலம் துணிச்சலுடன் எடுத்து வைக்க தயங்காதவர் நடிகர் சித்தார்த்.
2. மாடல் அழகிகளுக்கு போதாத காலம்...! ஒரே மாதத்தில் 3-வது அழகி தற்கொலை
ஒரு மாத இடைவெளிக்குள் மாடல் ஒருவர் கேரளத்தில் தற்கொலை என்ற பெயரில் இறப்பது இது மூன்றாவது முறை.
3. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த பிரபல இளம் நடிகை
இளம் நடிகை உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்
4. "கமல் மிரட்டபட்டாரா" "விடியல முடிவு பண்றது நான்" கவனம் ஈர்த்த விக்ரம் பட விழா…!
விக்ரம் படத்திலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த 'பத்தல பத்தல' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் சந்தித்தது.
5. பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி
பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி இது குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.