சினிமா செய்திகள்

துபாய் தொழில் அதிபரை மணக்கும் அனுஷ்கா? + "||" + Actress Anushka Shetty to marry Dubai-based businessman

துபாய் தொழில் அதிபரை மணக்கும் அனுஷ்கா?

துபாய் தொழில் அதிபரை மணக்கும் அனுஷ்கா?
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன.
பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இணைத்து பேசினர். இறுதியாக மனைவியை விவாகரத்து செய்த 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் பேசப்பட்டது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்தார்.

சமீபத்தில் அனுஷ்காவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது எனக்கு தெரியவில்லை. திருமணம் முடிவானதும் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார்.

இந்த நிலையில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் தெலுங்கு திரையுலகில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அனுஷ்கா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - அனுஷ்கா?
ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2. 4 வருட திருமண வாழ்வை கொண்டாடிய கோலி - அனுஷ்கா தம்பதி
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.