சினிமா செய்திகள்

அப்புக்குட்டியும், கொரோனா காலமும்... + "||" + Appukutty and the Corona period ...

அப்புக்குட்டியும், கொரோனா காலமும்...

அப்புக்குட்டியும், கொரோனா காலமும்...
கொரோனாவின் இரண்டாவது அலையை எப்படி சமாளிக்கப்போகிறேனோ தெரியவில்லை’’ என்கிறார், அப்புக்குட்டி.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அப்புக்குட்டி. இவர் நடித்த ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. இந்த விருது தனக்கு நிறைய படவாய்ப்புகளை வாங்கி தரும் என்று எதிர்பார்த்தார். இவருடைய ஆசை நிறைவேறவில்லை.

அப்புக்குட்டியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். முதலில் சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்புக்குட்டி, இப்போது கோவூரில் வசிக்கிறார். இதுவும் வாடகை வீடுதான்.

‘‘சொந்த வீடு வாங்குகிற அளவுக்கு கையில் பணம் இல்லை. கொரோனாவின் முதல் அலை வீசியபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்போது தாக்கும் இரண்டாவது அலையை எப்படி சமாளிக்கப்போகிறேனோ தெரியவில்லை’’ என்கிறார், அப்புக்குட்டி.