சினிமா செய்திகள்

‘‘தமிழ் ராக்கர்ஸ் என்று பெயர் சூட்டுவதா?’’ தயாரிப்பாளருக்கு மிரட்டல் + "||" + "Named Tamil Rockers?" Threat to the producer

‘‘தமிழ் ராக்கர்ஸ் என்று பெயர் சூட்டுவதா?’’ தயாரிப்பாளருக்கு மிரட்டல்

‘‘தமிழ் ராக்கர்ஸ் என்று பெயர் சூட்டுவதா?’’ தயாரிப்பாளருக்கு மிரட்டல்
ஒரு படத்துக்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்று பெயர் சூட்டியதற்காக, அந்த படத்தின் தயாரிப்பாளரை மிரட்டுகிறார்கள். இதற்காக போலீஸ் உதவியை நாடியிருக்கிறோம் என தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சங்க தலைவர் ஜாகுவார் தங்கம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
‘‘தமிழ் பட உலகம் ஒரு காலத்தில் இந்திய திரையுலகத்துக்கே வழிகாட்டியாக இருந்தது. இப்போது மற்ற மொழி பட உலகம் அனைத்தும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ் திரையுலகம் பின்தங்கி விட்டது.

இந்தநிலையில், எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒரு படதயாரிப்பாளர் தனது படத்துக்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். அதை எங்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்து அனுமதி வழங்கினோம். படம் முடிவடைந்து தணிக்கை குழுவும் அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸ் என்று படத்துக்கு பெயர் வைக்கக் கூடாது என்று அந்த பட அதிபரை இரண்டு பேர் மிரட்டியிருக்கிறார்கள். இதற்காக போலீஸ் உதவியை கேட்டு இருக்கிறோம்.’’

இவ்வாறு ஜாகுவார் தங்கம் கூறியிருக்கிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை