சினிமா செய்திகள்

பிரபல டி.வி. நடிகை கொரோனாவுக்கு பலி + "||" + Celebrity TV Actress Kills the corona

பிரபல டி.வி. நடிகை கொரோனாவுக்கு பலி

பிரபல டி.வி. நடிகை கொரோனாவுக்கு பலி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்ம குமாரிகளுக்கான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
பிரபல தொலைக்காட்சி நடிகை கானுப்பிரியா. இவர் அனன்ரோ, கஹி ஏக் காவ்ன், கர்த்தாவ்யா, மேரி கஹானி, டெசு கே போல், தும்ஹாரா இண்டெசர் ஹை உள்ளிட்ட தொடர்களில் நடித்து இருக்கிறார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்ம குமாரிகளுக்கான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

கானுப்பிரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு டி.வி. நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கானுப்பிரியா மறைவுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.