சினிமா செய்திகள்

‘அசுரன்' பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா + "||" + Asuran movie actress Corona to Ammu Abrami

‘அசுரன்' பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா

‘அசுரன்' பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா
தமிழில் விஜய்யின் பைரவா படத்தில் அறிமுகமானவர் அம்மு அபிராமி.
தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுசுடன் அசுரன் மற்றும் என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

அம்மு அபிராமி விரைவில் குணமடைய வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.