ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - நடிகர் சித்தார்த் டுவீட்


ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் -  நடிகர் சித்தார்த் டுவீட்
x
தினத்தந்தி 3 May 2021 4:20 PM GMT (Updated: 2021-05-03T21:50:12+05:30)

ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் என நடிகர் சித்தார்த் டுவீட் செய்துள்ளார்.

சென்னை,

நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், தனிபெருமான்மை பலத்தோடு திமுக ஆட்சி அமைக்கிறது. புதிய முதல்வராக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் நடிகர் சித்தார்த், "ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் முதல்வராகியுள்ளார் அவர் தான் ஸ்டாலின். இந்த மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். எங்களது அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்டு நல்லாட்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன். எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் உங்களைப் பார்க்கிறோம். வாழ்க தமிழ்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story