சினிமா செய்திகள்

மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் + "||" + Rajinikanth to acting in new film again

மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்

மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தை டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

தேசிங்கு பெரியசாமி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த இரு இயக்குனர்களும் ரஜினியிடம் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரை ரஜினி தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விரைவில் அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..!
வருடாந்திர உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்க செல்ல இருக்கிறார்.
2. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம்
ரஜினிகாந்த்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் யார்தான் வேண்டாமென்று சொல்வார்கள் என்றார் கூறியுள்ளார்.
3. 'தலைவர் 169' பட அறிவிப்பு வீடியோ புதிய சாதனை.!
ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வீடியோ புதிய சாதனையை படைத்துள்ளது.
4. மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார் ஐஸ்வர்யா தனுஷ்..!
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
5. குறைந்த வயது நடிகையுடன் ரஜினிகாந்த் ஜோடி சேர தயக்கம்?
ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய 169-வது படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.