கமலுடன் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்


கமலுடன் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்
x
தினத்தந்தி 5 May 2021 12:57 AM GMT (Updated: 2021-05-05T06:27:35+05:30)

பிரபல மலையாள நடிகர் மேளா ரகு. இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பிரபல மலையாள நடிகர் மேளா ரகு. இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மேளா ரகு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. மேளா ரகு 1980-ல் கே.ஜி.ஜார்ஜ் இயக்கத்தில் திரைக்கு வந்த மேளா என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் மம்முட்டி சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தமிழில் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்திலும் மேளா ரகு நடித்து இருக்கிறார். கடைசியாக மோகன்லால் மீனா நடித்து திரைக்கு வந்த திரிஷ்யம் 2 படத்தில் தேநீர் கடையில் வேலை பார்ப்பவராக வந்தார். தமிழ், மலையாள மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் மேளா ரகு நடித்து இருக்கிறார். அவரது மறைவுக்கு நடிகர்நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story