சினிமா செய்திகள்

கொரோனா நோயாளிக்கு ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பிய சோனு சூட் + "||" + Sonu Suite who sent an ambulance to the Corona patient

கொரோனா நோயாளிக்கு ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பிய சோனு சூட்

கொரோனா நோயாளிக்கு ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பிய சோனு சூட்
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். தற்போது கொரோனா 2-வது அலை பரவலிலும் உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிகிச்சைக்காக நாக்பூரில் இருந்து ஐதராபாத்துக்கு அழைத்து வந்து உதவினார். உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்த இன்னொரு கொரோனா நோயாளியை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் பெரிய ஆஸ்பத்திரிக்கு போகுமாறு கூறினர். ஆனால் பெரிய ஆஸ்பத்திரிகளிலும் இடம் இல்லை.

அந்த நோயாளி சமூக வலைத்தளம் மூலம் சோனுசூட்டிடம் உதவி கேட்டார். சோனு சூட் உடனடியாக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அந்த நோயாளியை ஐதராபாத்துக்கு அழைத்து வந்து பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் குறித்த விசாரணையை சீனா நிராகரிப்பது பொறுப்பற்றது - அமெரிக்கா கருத்து
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த 2-ம் கட்ட விசாரணையை சீனா நிராகரிப்பது பொறுப்பற்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. 5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
3. மாநகராட்சியின் மேல்முறையீடு வழக்கு வாபஸ் கொரோனாவால் பலியான டாக்டரின் உடல் 15 மாதங்களுக்குப் பிறகு மறு அடக்கம்
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் 15 மாதங்களுக்குப் பிறகு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
4. தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது
2-வது டோசுக்கு பயன்படுத்த சுகாதாரத்துறை திட்டம்: தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது.
5. கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது. புதிதாக 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.