சினிமா செய்திகள்

திரிஷ்யம் 2 இந்தியில் ரீமேக் + "||" + Trishyam 2 remake in Hindi

திரிஷ்யம் 2 இந்தியில் ரீமேக்

திரிஷ்யம் 2 இந்தியில் ரீமேக்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடித்து மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடித்து மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து திரிஷ்யம் படம் தமிழில் கமல்ஹாசன் கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் ஆனது.

இந்த நிலையில் திரிஷ்யம் 2-ம் பாகமும் மலையாளத்தில் தயாராகி சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. திரிஷ்யம் 2-ம் பாகத்திலும் மோகன்லால் மீனா நடித்து இருந்தனர். இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.

இதில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் திரிஷ்யம் 2-ம் பாகம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். திரிஷ்யம் முதல் பாகம் இந்தி ரீமேக்கில் மோகன்லால் கதாபாத்திரத்தில் அஜய்தேவ்கானும் மீனா கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவும் நடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்திலும் அவர்களே நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியில் ரீமேக் ஆகிறது ‘திருட்டுப்பயலே 2’
தமிழில் கடந்த 2017-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
2. இந்தியில் ரீமேக் ஆகும் பா.இரஞ்சித் படம்
தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், விரைவில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
3. விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக்
தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 2018-ல் வெளியான படம் 96. இந்த படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.
4. இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் ‘96’
தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 96 திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5. அஜித்தின் 2 படங்கள் தெலுங்கில் ‘ரீமேக்'
வெற்றி பெற்ற பிறமொழி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டுகிறார்.