சர்ச்சை கருத்து பதிவால் கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்


சர்ச்சை கருத்து பதிவால் கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
x
தினத்தந்தி 5 May 2021 1:11 AM GMT (Updated: 5 May 2021 1:11 AM GMT)

தமிழில் தாம்தூம் படத்தில் அறிமுகமான கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் தாம்தூம் படத்தில் அறிமுகமான கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

கங்கனா ரணாவத் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என்றும் இந்தி நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்றும் சாடினார். விவசாயிகள், போராட்டத்தை விமர்சித்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்ததை கண்டித்து டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டார். வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றெல்லாம் பதிவுகளை பகிர்ந்தார். கங்கனாவின் பதிவுகள் டுவிட்டர் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து அவரது டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது. தனது கணக்கு முடக்கப்பட்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரணாவத் கண்டித்துள்ளார்.



Next Story