சினிமா செய்திகள்

வலைத்தள போலி கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகர் யோகிபாபு + "||" + Actor Yogibabu warns website fake account fans

வலைத்தள போலி கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகர் யோகிபாபு

வலைத்தள போலி கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகர் யோகிபாபு
சமூக வலைத்தளத்தில் நடிகர்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி செய்யும் போக்கு தொடர்கிறது.
சமூக வலைத்தளத்தில் நடிகர்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி செய்யும் போக்கு தொடர்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு பெயரில் ஏற்கனவே மர்ம நபர்கள் வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி அரசியல் தலைவர்களை கேலி செய்வதுபோன்று பதிவுகளை வெளியிட்டனர். இதனால் அதிர்ச்சியான யோகிபாபு நான் அவ்வாறு செய்யவில்லை. எனது பெயரில் டுவிட்டரில் போலி கணக்குகள் வைத்து இதுபோன்ற தவறான தகவலை வெளியிடுகிறார்கள்'' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் யோகிபாபு பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு உருவாகி உள்ளது. அதில் யோகிபாபுவின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சர்ச்சை கருத்துக்களும் பதிவிடப்படுகின்றன. இந்த போலி கணக்கை உண்மை என்று நம்பி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இதையடுத்து தற்போது யோகிபாபு அந்த போலி கணக்கை தனது அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “இது போலி கணக்கு. இந்த கணக்கை ரசிகர்கள் யாரும் பின் தொடர வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்.
2. நடிகர்-ஒளிப்பதிவாளர் அருண்மொழிவர்மன் திடீர் மரணம்
மறைந்த பழம் பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகன் அருண்மொழி வர்மன். இவர் பிரபல நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி ஆகியோரின் சகோதரர் ஆவார்.
3. கமலுடன் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் மேளா ரகு. இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
4. ஐதராபாத்தில் நடந்தது நடிகர் விஷ்ணு விஷால் காதல் திருமணம் பேட்மிண்டன் வீராங்கனையை மணந்தார்
நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது.
5. கொரோனா கட்டுப்பாடு மீறல்: ரசிகர்களை கண்டித்த நடிகர் அஜித்குமார்
கொரோனா கட்டுப்பாடு மீறல்: ரசிகர்களை கண்டித்த நடிகர் அஜித்குமார் செல்பி எடுத்தவரின் செல்போனை பறித்தார்.