சினிமா செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பிரபு வாழ்த்து + "||" + Actor Prabhu congratulates MK Stalin

மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பிரபு வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பிரபு வாழ்த்து
முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக பிரமுகர்கள் பலர் வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறார்கள்.
முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக பிரமுகர்கள் பலர் வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறார்கள். நடிகர் பிரபு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அருமை பெரியப்பா கலைஞர் வழியில் நின்று, கடுமையான சோதனைகளை கடந்தவர் அண்ணன் ஸ்டாலின். அப்பாவின் அடிச்சுவட்டில் அயராது மக்கள் பணியாற்றி, நல்லரசு நடத்திட வாழ்த்துகிறேன். முதன் முதலாக முதல்-அமைச்சர் பதவியில் அமருகின்ற அன்பு சகோதரருக்கு நடிகர் திலகம் குடும்பத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரபு கூறியிருக்கிறார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், களம் கண்ட முதல்-தேர்தலிலேயே வியக்கத்தக்க வெற்றி பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சுமார் 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன், சட்டமன்ற உறுப்பினராக, வணக்கத்துக்குரிய மேயராக, துணை முதல்-அமைச்சராக பல நிர்வாக பொறுப்புகளை ஏற்று திறம்பட நடத்தி அனுபவங்களை சேகரித்து, இப்போது முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினின் வெற்றி வரலாற்று சாதனை என்றால் அது மிகையாகாது.

புதிதாக அமைய இருக்கும் தி.மு.க ஆட்சியில், உதய சூரியன் வரவால், தமிழ் திரை உலகில் படர்ந்திருக்கும் பல சோதனையான, வேதனையான இருள் விலகி புத்தொளி பிறக்கும் என நம்புகிறேன். ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்திருக்கும், தமிழக மக்களின் இதயங்களை வெல்லும், ஒரு நிறைவான-நிலையான- மகிழ்வான ஆட்சி நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2. தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
3. தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெவித்துள்ளார்.
4. தமிழக பா.ஜ.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
தமிழக பா.ஜ.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்டன.
5. சீக்கியர்களின் பர்காஷ் பூரப் புனித நிகழ்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சீக்கியர்களின் ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் ஜி என்ற புனித நூல் எழுதியதன் நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.