'என்னடி முனியம்மா' பாடி பிரபலமான நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் மரணம்


என்னடி முனியம்மா பாடி பிரபலமான நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் மரணம்
x
தினத்தந்தி 6 May 2021 12:55 AM GMT (Updated: 2021-05-06T06:25:28+05:30)

பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன். இவர் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்தார். டி.கே.எஸ்.நடராஜனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.

பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன். இவர் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்தார். டி.கே.எஸ்.நடராஜனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 87.

டி.கே.எஸ்.நடராஜன் சிறுவயதிலேயே டி.கே.எஸ் நாடக குழுவில் இணைந்து ஏராளமான மேடை நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தார். எம்.ஜி.ஆருடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். நீதிக்கு தலைவணங்கு, நேற்று இன்று நாளை, நான் ஏன் பிறந்தேன், நாடோடி, ரத்த பாசம், தேன் கிண்ணம், கவலை இல்லாத மனிதன், ஆடுபுலி ஆட்டம், மங்கள வாத்தியம், உதய கீதம், காதல் பரிசு, வருஷம் 16, வாத்தியார் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் சங்கர் கணேஷ் இசையில் டி.கே.எஸ்.நடராஜன் பாடிய என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து அவரை பிரபலப்படுத்தியது. இந்த பாடல் அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. ஏராளமான கிராமிய பாடல்களையும் பாடி இருக்கிறார். டி.கே.எஸ். நடராஜன் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

Next Story