சினிமா செய்திகள்

வில்லியாக நடிக்கும் சமந்தா + "||" + Samantha as Willie

வில்லியாக நடிக்கும் சமந்தா

வில்லியாக நடிக்கும் சமந்தா
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ‘த பேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ‘த பேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வெப் தொடருக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

கொரோனா குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், “நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும்.

கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத்திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் இருக்கிறார்கள். அந்த வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

கஷ்டம் வந்து விட்டது என்று உயிரை மாய்த்துக்கொள்வது, கொரோனா வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது. தைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது.

கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோரும் போட்டு முடிக்கிற காலமும் விரைவில் வரும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் கொரோனாவை ஜெயித்து விடலாம். நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். அதை தாண்டி வருவோம்’' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோயிலில் வைத்து ‘அப்படியொரு’ கேள்விகேட்ட செய்தியாளர்.... கடுப்பாகி திட்டிய சமந்தா
தெலுங்கு ஊடக செய்தியாளரை நடிகை சமந்தா திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2. வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்
வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்.
3. மன்னிப்பு கேட்ட சமந்தா
பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுவரை அதுகுறித்து கருத்து சொல்லாமல் இருந்த அவர் தற்போது முதல் தடவையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
4. மீண்டும் வில்லியாக சிம்ரன்
தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
5. நகை தொழிலில் இறங்கும் சமந்தா
நகை தொழிலில் இறங்கும் சமந்தா.