சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய ஊரடங்கை கடைப்பிடிக்கச் சொல்லும் அனுஷ்கா + "||" + Anushka tells him to follow self curfew to escape from the corona

கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய ஊரடங்கை கடைப்பிடிக்கச் சொல்லும் அனுஷ்கா

கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய ஊரடங்கை கடைப்பிடிக்கச் சொல்லும் அனுஷ்கா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இதில் சிக்குகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா கொரோனாவை எதிர்கொள்ள ஆலோசனைகள் கூறியுள்ளார்.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இதில் சிக்குகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா கொரோனாவை எதிர்கொள்ள ஆலோசனைகள் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா வெளியிட்டுள்ள பதிவில், “கஷ்டமான கால கட்டத்தில் இருக்கிறோம். பெரிய இழப்புகளை சந்திக்கும் நிலைமை உள்ளது. எல்லோரும் இயன்ற உதவிகளை செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த கஷ்டமான நிலையில் இருந்து மீள்வதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள். வீட்டில் இருங்கள்.

நமக்கு நாமே சுய ஊரடங்கை கடைப்பிடியுங்கள். குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தொடர்ந்து உரையாடுங்கள். மூச்சு பயிற்சி செய்யுங்கள். தினமும் ஏதேனும் நல்ல விஷயங்களை காணுங்கள். நேர்மறையாக இருங்கள்.

அனைவருக்கும் ஆறுதல் சொல்ல நமக்கு ஆற்றல் அவசியம். முடிந்த அளவு உதவுங்கள். பிரார்த்தனை செய்யத்தான் உங்களால் முடியும் என்றால் அதை செய்யுங்கள். எதிர்மறையான விஷயங்களில் சக்தியை வீணாக்க வேண்டாம். இந்த சோதனையை கடந்து வருவோம். நமக்குள்ள சக்தியை ஒன்று சேர்த்து இந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வருவோம்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி போட்ட கார்த்தி
ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.
2. நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படுவது இல்லை என குற்றச்சாட்டு ஐகோர்ட்டு நீதிபதிகள் கவலை
நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
3. வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய வகை கொரோனா தொற்றால் சிங்கம் பாதிப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய வகை கொரோனா தொற்றால் சிங்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற விலங்குகளை பாதுகாக்க மருத்துவ குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
4. கோவை, சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைகிறது: தமிழகத்தில் 15,759 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கோவை, சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைகிறது. நேற்று ஒரே நாளில் 15,759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
5. ஒரேநாளில் 290 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்.