சினிமா செய்திகள்

தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection for Deepika Padukone

தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று

தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார்.
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் தனது பெற்றோருடன் தீபிகா படுகோனே வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, தங்கை அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தீபிகா படுகோனேவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீபிகா படுகோனே கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

டைரக்டர் வசந்த பாலனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு..!!
டெல்லியில் இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அசாம் வெள்ளம்; 20 மாவட்டங்களில் 1.97 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 20 மாவட்டங்களை சேர்ந்த 1.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3. தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
4. அசாமில் வெள்ளம்; 7 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர் பாதிப்பு
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. அசாமில் வெள்ளம்: 3 பேர் பலி; 25 ஆயிரம் பேர் பாதிப்பு
அசாமில் இந்த ஆண்டில் ஏற்பட்ட முதல் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 25 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.