சினிமா செய்திகள்

ஓ.டி.டி. தளத்தில் விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ் + "||" + ODT 2 more pictures of Vijay Sethupathi released on the site

ஓ.டி.டி. தளத்தில் விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்

ஓ.டி.டி. தளத்தில் விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுசின் ஜெகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

தற்போது விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்துள்ள 19 (1) (ஏ) என்ற படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து கொரோனா பரவலால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வி.எஸ்.இந்து இயக்கி உள்ளார். தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரண சிங்கம் படம் ஓ.டி.டி.யில் வந்துள்ளது. நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சிவா நடித்துள்ள சுமோ படம் ஓ.டி.டி.யில் வெளியாவது உறுதியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளி ரேசில் மோதும் 5 படங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் ரஜினி, சூர்யா, விஷால், சிம்பு, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் வெளியாக இருக்கிறது.
2. அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீஸாகும் சசிகுமாரின் 2 படங்கள்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், உடன்பிறப்பே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
3. ஒரே நாளில் ஓடிடி-யில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 படங்கள்
இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடித்துள்ள 2 திரைப்படங்கள் ஒரே நாளில் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
4. பண்டிகையில் ரிலீசாகும் பெரிய நடிகர்கள் படங்கள்
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
5. கமல் நடிக்கும் 5 படங்கள்
கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.