சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி + "||" + Chhichhore actress Abhilasha Patil dies of Covid complications Hindi and Marathi film actress Abhilasha Patil died

கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி

கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலியானார்.
மும்பை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இதன் தாக்கம் அதிகரித்து உள்ளது.  ஒரே நாளில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 3,980 பேர் உயிரிழந் துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா தொற்றுக்கு பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

மும்பையில் வசித்து வந்த இவர், சில நாட்களுக்கு முன் பனாரஸ் சென்றுள்ளார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சோதனை மேற்கொண்டார். அவருக்கு தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகை இம்ரான் கானின் உதவி கேட்டு கடிதம்
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகை பிரதமர் இம்ரான் கானின் உதவி கேட்டு கடிதம் எழுதி உள்ளார். நில அபகரிப்பாளர் தனது தாயைக் கடத்திச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
2. சினிமா படபிடிப்புக்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா
'பாட்டு' சினிமா படபிடிப்புக்காக தனி விமானத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.
3. உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் 19 ஆம் தேதி அமெரிக்கா பயணம்
உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
4. தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்!
தேசிய விருது வென்ற கன்னட நடிகர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
5. தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரபல நடிகை புகார்
வங்காள தேசத்தின் பிரபல நடிகை தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரதமர் பேஸ்புக் மூலம் புகார் கூறி உள்ளார்.