சினிமா செய்திகள்

‘மாநாடு’ படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் + "||" + YG Mahendran in the film 'Conference'

‘மாநாடு’ படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன்

‘மாநாடு’ படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன்
வெங்கட்பிரபு டைரக்டு செய்து வரும் ‘மாநாடு’ படத்தில், ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் சொன்னவை...
“எனக்கு வெங்கட்பிரபு படங்கள் பிடிக்கும். நானும், அவரும் நகைச்சுவை ஏரியாவில் பயணிப்பதால் அவர் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என்னுடைய ஸ்டைலில் நடிக்கும்படி டைரக்டர் வெங்கட்பிரபு கூறிவிட்டார்.

இந்த படத்தின் திரைக்கதை பேசப்படும் வகையில் அமைந்துள்ளது. படம் பார்க்கும்போது இதை உணர்வீர்கள். 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். அந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உடன் இருந்து படக்குழுவினர் அனைவரையும் பார்த்துக் கொள்கிறார்”.