மாநில செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல் + "||" + MK Stalin mourns the death of comedian Pandu, who was treated for corona

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
சென்னை, 

தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளாக முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் பாண்டு. இவர் குடும்பத்துடன் சென்னை அடையாறில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பாண்டுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரது மனைவி குமுதாவுக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது.

இதையடுத்து இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டு நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. பாண்டு மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் இடிச்சப்புளி செல்வராஜின் சகோதரரான பாண்டு கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். சின்னத்தம்பி, காதல் கோட்டை, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, பத்ரி, வில்லன், ஏழையின் சிரிப்பில், கில்லி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

திரையுலகினர் அதிர்ச்சி

அவரது மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மரணம் அடைந்த பாண்டுவுக்கு பிரபு, பஞ்சு, பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். பாண்டு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் பெயர் பலகைகளை அழகாக வடிவமைக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்.

அ.தி.மு.க.வின் சின்னத்தை வடிவமைத்தவர் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டு மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து உள்ளது. நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்த திரைப்பட நடிகர் பாண்டுவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியருமான பாண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தென்னிந்தியாவிலேயே ஓவிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரிய பாண்டு, நகைச்சுவையில் தனக்கெனத் தனி பாணியை முத்திரையாகப் பதித்துப் புகழ்பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி ஓவிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

பாண்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. இணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார் !
மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.
2. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வழங்கும் திட்டம்; மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரண வைப்புத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
3. கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
4. மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழக மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
5. ரூ.1,036 கோடி செலவில் நடந்து வரும் கல்லணை சீரமைப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு
ரூ.1,036 கோடி செலவில் நடந்து வரும் கல்லணை சீரமைப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், திருச்சியில் நடந்து வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.