சினிமா செய்திகள்

ஆண்ட்ரியாவுக்கு கொரோனா + "||" + Corona to Andrea

ஆண்ட்ரியாவுக்கு கொரோனா

ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள, தரமணி, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாக உள்ள நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள, தரமணி, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாக உள்ள நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. என்னை நன்றாக கவனித்துக்கொண்ட குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. இன்னும் நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் நன்றாக குணமடைந்து வருகிறேன்.

எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாலும், கொரோனாவால் நாடு மோசமான நிலைக்கு செல்வதால் என்ன பதிவிட வேண்டும் என்று தெரியாததாலும் சமூக ஊடங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டேன். என்ன பேசுவது என்று தெரியாத நேரத்தில் நான் மனதில் இருந்து பாடுகிறேன். அது அனைத்தையும் சொல்லிவிடும். இதுவும் கடந்து போகும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். தொற்று காலம் முடிந்து மீண்டும் சந்திப்போம்'' என்று கூறியுள்ளார்.

ஆண்ட்ரியா தற்போது அரண்மனை 3 மற்றும் பிசாசு 2-ம் பாகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்டாவில், கொரோனாவுக்கு 21 பேர் பலி ஒரே நாளில் 1,325 பேருக்கு தொற்று
டெல்டாவில், கொரோனாவுக்கு 21 பேர் பலியானார்கள். ஒரே நாளில் 1,325 பேருக்கு தொற்று உறுதியானது.
2. கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த பெண் மயங்கி விழுந்து சாவு
கும்பகோணத்தில், கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த பெண் மயங்கி விழுந்து இறந்தார்.
3. திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். அப்போது டோக்கன் வழங்கப்பட்ட 200 பேருக்கு மட்டும் போடப்பட்டதால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
4. புதிதாக 273 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் புதிதாக 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர்.
5. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.