பட அதிபர் சங்கசெயற்குழு கூட்டம் திரைப்படங்களை வெளியிட ஓ.டி.டி தளம் தொடங்க முடிவு


பட அதிபர் சங்கசெயற்குழு கூட்டம் திரைப்படங்களை வெளியிட ஓ.டி.டி தளம் தொடங்க முடிவு
x
தினத்தந்தி 7 May 2021 1:03 AM GMT (Updated: 2021-05-07T06:33:08+05:30)

பட அதிபர் சங்கசெயற்குழு கூட்டம் திரைப்படங்களை வெளியிட ஓ.டி.டி தளம் தொடங்க முடிவு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவ நன்கொடை பெற நிர்வாகிகள் வற்புறுத்தினர். சங்கத்தின் பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். தயாரிப்பாளர்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி கட்டணத்துக்கு சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து நிதி வழங்கவும் வியாபாரம் ஆகாமல் இருக்கும் சங்க உறுப்பினர்கனின் தமிழ் திரைப்படங்களை சங்கம் மூலம் தனி ஓ.டி.டி தளம் தொடங்கி அதில் வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சங்கத்தின் துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story