சினிமா செய்திகள்

அமெரிக்கா செல்லும் ரஜினி? + "||" + Rajini to go to US?

அமெரிக்கா செல்லும் ரஜினி?

அமெரிக்கா செல்லும் ரஜினி?
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ரஜினிகாந்த் சில வாரங்களாக அங்கேயே தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்தார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு சென்னையில் டப்பிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்க உள்ளது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

அண்ணாத்த படத்துக்கு டப்பிங் பேசிவிட்டு ரஜினிகாந்த் அடுத்த மாதம் (ஜூன்) அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா சென்று உடல் பரிசோதனைகள் செய்து இருக்கிறார்.

எனவே மீண்டும் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதற்காக அமெரிக்கா செல்வதாக தெரிகிறது. நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினியும் சில நாட்கள் அவர்களுடன் தங்கி இருப்பார் என்று தெரிகிறது. ஆனாலும் கொரோனா 2-வது அலை காரணமாக அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
2. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை 40.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 89 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 85 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.