சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா? + "||" + Vijay Sethupathi, Is Veerappan playing the role?

விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா?

விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா?
தேசிய அளவில் பிரபலமாகி இருக்கும் டைரக்டர் வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் சூரி கதைநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவர் சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பன் வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் பரவியது. இதுபற்றி விசாரித்தபோது...

“தமிழ் தேசிய குழுவில் மிக முக்கிய நபராக விளங்கிய ‘வாத்தியார்’ வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தெரியவந்துள்ளது. வாத்தியார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து அவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அவரின் போராட்டங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான செயல்பாடுகள் படத்தில் முக்கிய காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன.

வாத்தியாரின் தோற்றத்தில் விஜய் சேதுபதியை வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டு அருகில் அமைக்கப்பட்ட அரங்கில் நடந்தது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு மீண்டும் சத்தியமங்கலம் காட்டில் நடைபெற இருக்கிறது”.

தொடர்புடைய செய்திகள்

1. முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி
கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
2. விஜய் சேதுபதி காட்டம்
நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.
3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா? விஜய் சேதுபதி வருத்தம்
விஜய்சேதுபதி. பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
4. பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
5. 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.