மலையாளம் கற்றார் மம்முட்டியின் தீவிர ரசிகராக சூரி


மலையாளம் கற்றார் மம்முட்டியின் தீவிர ரசிகராக சூரி
x
தினத்தந்தி 7 May 2021 6:47 AM GMT (Updated: 2021-05-07T12:17:24+05:30)

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்த சூரி இப்போது கதைநாயகனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.

ஆச்சரியப்படும் அளவுக்கு பலதரப்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது, ‘வேலன்’ என்ற படத்தில், கேரளாவைச் சேர்ந்தவராக நடிக்கிறார். இதற்காக அவர் மலையாளம் கற்றுக் கொண்டார். படத்தில் அவர் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகராக, ‘மம்முக்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

படத்தை டைரக்டு செய்திருப்பவர், கவின். டைரக்டர் சிவாவிடம் உதவி டைரக்டராக இருந்தவர். இவர் கூறுகிறார்:

“நகரமும், கிராமமும் சேர்ந்த கதை, இது. படத்தின் முதல்பாதி நகரத்திலும், இரண்டாம் பாதி கிராமத்திலும் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. பொள்ளாச்சியிலும், பாலக்காட்டிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.

‘தில்லையார் பழனிச்சாமி’ என்கிற முக்கிய வேடத்தில் பிரபு நடித்துள்ளார். அவருடன் சூரி, முகில்ராவ், ஹரீஸ் பேரடி, மீனாட்சி, கல்யாணி மேனன், ஸ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோரும் நடித்துள்ளனர். கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்”.

Next Story