தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்


தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்
x
தினத்தந்தி 8 May 2021 5:24 AM GMT (Updated: 2021-05-08T10:54:13+05:30)

தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அடுத்து தனுஷ் கைவசம் 10 படங்கள் உள்ளன.

அவற்றில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படம் முடிந்து அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.இந்தியில் அக்‌ஷய்குமாருடன் அந்த்ராங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது த கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுள்ளார். ஹாலிவுட் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது தனுசுக்கு 43-வது படம். இதில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். தொடர்ந்ந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்க உள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு மித்ரன் ஜவஹர் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார். தொடர்ந்து ராட்சசன் படத்தை எடுத்து பிரபலமான ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். வெற்றி மாறன் இயக்கும் படமொன்றிலும் நடிக்க இருக்கிறார். இறுதியில் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்தில் நடிக்கிறார். இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.

Next Story